மாநில செய்திகள்
சென்னையில் 3-ம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,204.87 கோடியில் ஒப்பந்தம்
மாநில செய்திகள்

சென்னையில் 3-ம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,204.87 கோடியில் ஒப்பந்தம்

தினத்தந்தி
|
18 July 2023 6:41 PM IST

டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1,204.87 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடம் 3-ல் ரெயில் நிலையங்கள் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ரூ.1,204.87 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் தி.அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



மேலும் செய்திகள்